திங்கள், 9 மார்ச், 2009

ஸ்பாட் பைன்

சமீபத்தில் வண்டியில் போய் கொண்டிருந்த பொழுது ட்ராபிக் போலீஸ் பிடித்து கொண்டார்கள். லைசன்ஸ் மற்றும் டாக்குமெண்ட்ஸ் சரி பார்க்கனுமாம்!. என்னிடம் லைசன்ஸ் தவிர டாக்குமெண்ட்ஸ் ஒன்னுமே இல்லை. கான்ஸ்டபிள் மேலும் கீழும் பார்த்தார். வீட்டில் போய் எடுத்துட்டு வர்ரேன் சார்னு சொன்னேன். ஸ்பாட்ல இல்லாததுக்கு 200 ரூபாய் பைன் கட்டனுமேனு சொன்னார். நான் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு திரும்பவும் சொன்னேன், வீட்டில் போய் எடுத்துட்டு வர்ரேன் சார். இன்ஸ்பெக்டர் கிட்ட் சொல்லிட்டு போங்கனு சொன்னார்.

இன்ஸ்பெக்டர் கிட்ட போனேன். அவருகிட்ட சார் பேப்பர்ஸ் இல்லை எடுத்துட்டு வற்றேன்னு சொன்னேன். லைசன்ஸ் இருக்கா? எங்க வேலை பார்கிறீங்க? சொன்னேன். சரி, கொண்டு வரச் சொல்லுங்கனு சொன்னார். ஃப்ரெண்டுக்கு போன் பன்னி அவன் எனக்காக என் வீட்டில் போய் எடுத்து வந்தான். இன்ஸ் கிட்ட டாக்குமெண்ட்ஸ் காட்டிட்டு வண்டிய எடுத்துட்டு வந்தேன்.

ஸ்பாட் பைன் 200 ரூபாய் எப்படி கட்டாம வந்தேன்னு கேக்றீங்களா? (கேக்காட்டியும் சொல்லித்தானே ஆகனும்) வண்டி வாங்கின புதுசில இப்படித்தான் ஒரு ஸார்ஜெண்ட் பிடிச்சார். அப்ப எல்லா டாக்குமெண்ட்ஸும் இருந்த்து. ஆனா பாருங்க நான் அப்ப எல் போர்ட். வண்டியில எல் ஸ்டிக்கர் ஒட்டலை. உடனே 100 ரூபாய் பைன் போட்டுட்டார். நானும் நல்ல பிள்ளையா கட்டிட்டு வந்துட்டேன். வந்து அந்த பைன் கட்டின ரசீத படிச்சு பார்த்தா, காவலர் சொன்ன திருத்தங்களை மூன்று தினங்களில் சரி செய்யாததுனால நான் பைன் கட்டுகின்றேன்னு ஒப்பு கொள்வதாக அதுல எழுதியிருககு (அதுல எழுதியிருந்த சரியான வாசகம் நினைவுல இல்லை, சாராம்சம் மட்டும் சொல்லியிருக்கேன்).
அன்று இரவு டி.வி.ல ஒரு வக்கீல் பேட்டி குடுக்கும் போது சொன்னாரு ஸ்பாட் பைன்னு ஒன்னும் சட்டத்துல கிடையாதாம். சம்மந்தப்பட்ட பார்ட்டியும் போலீஸும் போட்டுக் கொள்கின்ற ஒப்பந்தத்துக்கு பெயர் தான் ஸ்பாட் பைனாம்.

ஆபிஸ்லே வந்து புலம்பினேன், அநியாயமா 100 ருபாய் போச்சுனு. நடந்ததையும் ரசீதுல எழுதியிருந்ததையும் சொன்னேன். என் நன்பர் சொன்னாரு இப்படித்தான் நான் பூட்டியிருந்த ரயில் கேட்ட க்ராஸ் பன்னி வண்டிய உருட்டிட்டு போனேன் ரயில்வே போலீஸ் பிடிச்சிருச்சு (ஆச்சிரியம் தான்). கேஸ் புக்ல வேற எழுதி புட்டு 1800 ருபாய் பைன் கட்ட சொன்னாங்க. நான் அதெல்லாம் உங்க கிட்ட கட்ட முடியாது கோர்ட்டிலதான் கட்டுவேன்னு அடம் பிடிச்சேன். ரொம்ப நேரம் வாக்கு வாதம் பன்னினதுல போலிஸ் இறங்கி வந்தாங்க சரி சரி 200 ருபாய் மட்டும் கட்டுங்கனு, ஏன்னா அவங்களால கோர்ட்டுக்கு அலைய முடியாதாம். சரின்னு 200 ரூ கட்டிட்டார். கேஸ் என்ன தெரியுமா? ரயில்வே ட்ராக்கை அசிங்கம் செய்தது. என் வீட்டில கக்கூஸா இல்லைனு புலம்பினார்.

சட்டம் தெரியாம எவ்வளவு அசிங்கம் பாருங்க. அதுனால இனிமே ஸ்பாட் பைன்னு சொன்னா லா பாயிண்ட் பேசுங்க. (அடி வாங்கினா நான் பொறுப்பு இல்லை)